search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநலம் பாதிப்பு"

    புதுவை சாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் திலகர் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் சுபா (வயது30). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிலமாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலைக்கு முயன்றார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் சுபா மட்டும் வீட்டில் தனிமையாக இருந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கோரிமேடு போலீசில் சுபாவின் அண்ணன் அண்ணாமலை புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மனநலம் பாதித்தவர்களை சங்கிலியால் கட்டுவது கொடூரமானது, மனிதத்தன்மையற்றது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #SupremeCourt #Inhuman #Atrocious
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் கவுரவ்குமார் பன்சால் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், உத்தரபிரதேச மாநிலம் புடோன் மாவட்டத்தில் உள்ள மனநல காப்பகத்தில் மனநலம் பாதித்தவர்களை சங்கிலியால் கட்டிவைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல்நசீர் ஆகியோர் விசாரித்தனர். நீதிபதிகளிடம் இதுதொடர்பான புகைப்படங்களையும் வக்கீல் காண்பித்தார்.



    அதனை பார்த்த நீதிபதிகள், இது கொடூரமானது, மனிதத்தன்மையற்றது. ஒருவேளை இவர்கள் மூர்க்கத்தனமாக இருந்தாலும் சங்கிலியால் கட்டிப்போடுவதை ஏற்கமுடியாது. மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தில் வரம்புமீறி செயல்பட வேண்டாம் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    வழக்கு விசாரணையை 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #SupremeCourt #Inhuman #Atrocious 
    அரும்பார்த்தபுரத்தில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அரும்பார்த்த புரம் சண்முகம் நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42). லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே ராமச்சந்திரன் சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ராமச்சந்திரன் தனது மனைவி- மகனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென நள்ளிரவில் ராமச்சந்திரனை காணவில்லை.

    இதையடுத்து அவரது மனைவி பக்கத்து அறையில் சென்று பார்த்த போது அங்கு கணவர் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் சுற்றித்திரிந்த மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    தாம்பரம்:

    மத்தியபிரதேச மாநிலம், ஹர்சத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் குப்தா (வயது 36). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் 7 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த ஊரில் மாயமானார். பல ஊர்களில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்த இவர் ரெயிலில் சென்னை வந்து பல பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.

    கடந்த மாதம் 2-ந் தேதி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த இவரை திரிசூலத்தை சேர்ந்த ‘மனசு’ என்ற தொண்டு நிறுவன மனநல காப்பகத்தினர் மீட்டு சிகிச்சை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் ஓம்பிரகாஷ் குப்தா குணமடைந்தார். அப்போது அவர் தன்னுடைய வீட்டு முகவரியை தெரிவித்தார்.

    தேசிய அளவில் காணாமல்போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹீரா உதவியுடன் ஓம்பிரகாஷ் குப்தாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனவர் இறந்திருப்பார் என அவரது குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.

    ஆனால் அவர் நன்றாக இருப்பதை அறிந்து ‘வீடியோ கால்’ மூலம் அவருடன் பேசினார்கள். அப்போது ஆனந்த கண்ணீர் வடித்து, தங்கள் மகனை நேரில் வந்து அழைத்துச்செல்வதாக தெரிவித்தனர். அதன்படி அவரது தந்தை அனில்குமார் குப்தா நேற்று காலை மத்தியபிரதேசத்தில் இருந்து திரிசூலத்திற்கு வந்தார். அவரிடம் இருந்த அனைத்து ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்டது.

    மனசு மனநல காப்பக இயக்குனர் சூசை ஆண்டனி, மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹீரா முன்னிலையில் ஓம்பிரகாஷ் குப்தா அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். மகனை 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டுக்கொடுத்த அனைவருக்கும் அனில்குமார் குப்தா நன்றி தெரிவித்தார்.

    இதுகுறித்து ஆய்வாளர் தாஹீரா கூறுகையில், “ஏ.டி.ஜி.பி. சீமா அகர்வால் உத்தரவின் பேரில் காணாமல்போனவர்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை 140 பேர் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்” என்றார். 
    ஆலங்குடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கணவன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச்  சேர்ந்தவர் குணபாலன் ( வயது 43). இவருக்கும் இவரது மனைவி ஜெயபாரதி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜெயபாரதி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் எலிமருந்தை சாப்பிட்டு இறந்தார். 

    மனைவி இறந்த துக்கத்தில் குணபாலன் சோகத்துடன் காணப்பட்டு வந்தார். இந்நிலையில், குணபாலன் கடந்த 7-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் மனநலம் பாதிக்கப்பட்ட கால்நடை டாக்டர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் வடக்கு செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவ ராமகிருஷ்ணன் (வயது57), கால்நடை டாக்டர்.

    மனநலம் பாதிக்கப்பட்ட இவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் கழிவறைக்கு சென்ற அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி சீதாலட்சுமி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×